அந்த பக்கம் போகாதீங்க; சபரிமலை பக்தர்களுக்கு பா.ஜ., எம்.எல்.ஏ., வேண்டுகோள்
ஐதராபாத்:சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் தங்கள் யாத்திரையின் போது மசூதிகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்று தெலுங்கானா பா.ஜ., எம்.எல்.ஏ.,ராஜா சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கேரளாவின் எருமேலியில் அமைந்துள்ள வாவர் மசூதி, ஐயப்பனின் நெருங்கிய தோழரான வாவருக்கு இந்த மசூதி அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. சபரிமலை கோவிலுக்கு நடைபயணம் தொடங்கும் முன் பக்தர்கள் பாரம்பரியமாக இந்த இடத்திற்கு வருகை தருகின்றனர்.
இது குறித்து ராஜா சிங் தெரிவித்துள்ளதாவது;
பக்தர்கள் தங்கள் யாத்திரையின் போது மசூதிகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.'ஐயப்ப தீக்ஷா' விதிகளை யாத்ரீகர்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில முதல்வர்களும் 10 ஏக்கர் நிலத்தை, ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கேரளா அரசிடம் வேண்டுகோள் விட வேண்டும். இந்த நிலம், யாத்திரையின் போது சில நாட்களைக் கழிக்க காத்திருக்கும் பக்தர்களுக்கான தங்குமிட வசதிகளுக்குப் பயன்படுத்தப்படும்.
சபரிமலை கோவிலுக்கு வருபவர்களுக்கு யாத்திரை அனுபவத்தை மேம்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக விளங்கும்.
இவ்வாறு ராஜா சிங் தெரிவித்துள்ளார்.