கோவையில் சுவர் இடிந்து 2 பேர் பலி

கோவை:கோவை மாவட்டம் கிணத்துக்கடவு, காணியாளம்பாளையத்தில் உள்ள தனியார் கம்பெனியில் சுவர் இடிந்து விழுந்ததில் இரு வட மாநில தோழிலாளர்கள் பலியானார்கள்.



பீகாரை சேர்ந்தவர் சன்னர்மஜித், 42 மற்றும் மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் ரியாசன்சேக், 28. இவர்கள் இருவரும் கிணத்துக்கடவு அருகே காணியாளம்பாளையத்தில் உள்ள தனியார் கம்பெனியில் (தியோஸ் வென்டியூர்ஸ்) கட்டட தொழிலில் ஈடுபட்டு வந்தனர். இதில், இன்று (4ம் தேதி) கம்பெனி வளாகத்தில் சுவர் கட்டும் பணியில் இருவரும் ஈடுபட்டனர்.

அப்போது திடீரென சுவர் இடிந்து இருவர் மீதும் விழுந்தது. இதில், சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனர். இது குறித்து நெகமம் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

Advertisement