பொள்ளாச்சியில் கட்டுமான சுவர் இடிந்து விழுந்து இரு வடமாநிலத்தவர் பலி

1

கோவை: பொள்ளாச்சி அருகே கட்டுமானப் பணியின் போது சுவர் இடிந்து விழுந்த விபத்தில் சிக்கி வடமாநில தொழிலாளர்கள் 2 பேர் உயிரிழந்தனர்.



கோவையை அடுத்த கிணத்துக்கடவு அருகே உள்ள காணியாளம்பாளையத்தில் தனியார் கம்பெனிக்கான கட்டுமானப் பணிகள் நடந்து வந்துள்ளது. தொழிலாளர்கள் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த போது, திடீரென சுவர் இடிந்து விழுந்துள்ளது. இதில், பீகாரை சேர்ந்த சன்னர்மஜித், 42 மற்றும் மேற்கு வங்கத்தை சேர்ந்த ரியாசன்சேக், 28, ஆகியோர் உயிரிழந்தனர்.


இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்து வருகின்றனர். மேலும், இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த இருவரின் உடல்களும் மீட்கப்பட்டு, அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

Advertisement