பெஞ்சல் புயலை தீவிரமான இயற்கை பேரிடராக அறிவித்தது தமிழக அரசு

8

சென்னை: பெஞ்சல் புயலை தீவிரமான இயற்கை பேரிடராக தமிழக அரசு அறிவித்து உள்ளது. இதன் மூலம், சீரமைப்பு பணிக்கு, பேரிடர் நிதியுடன் மற்ற நிதிகளையும் பயன்படுத்த முடியும்.

கடந்த ஆண்டு நவ., மாதம் வங்கக்கடலில் உருவான பெஞ்சல் புயல், அம்மாதம் 30ம் தேதி கரையை கடந்தது. இதனால் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மழை கொட்டித் தீர்த்தது. இதனால், வீடுகள், விளை நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கி சேதமடைந்தன. உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சமும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.2 ஆயிரம் நிவாரணமும் அளிக்கப்பட்டு இருந்தது. மீட்பு பணிக்கு நிதி ஒதுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார்.

இந்நிலையில், பெஞ்சல் புயலை தீவிரமான இயற்கை பேரிடராக அறிவித்து, தமிழக பேரிடர் மேலாண்மைத்துறை அரசிதழில் வெளியிட்டு உள்ளது. இதன் மூலம், சீரமைப்பு பணிக்கு, பேரிடர் நிதியுடன் மற்ற நிதிகளையும் பயன்படுத்த முடியும்.

Advertisement