பரவசமூட்டும் பஞ்ச லோக சிலைகள்
சென்னையில் நடந்துவரும் புத்தகக்காட்சிக்கு வரும் பார்வையாளர்களை கவரும் விதத்தில் வேறு துறைகளைச் சேர்ந்த அரங்குகளும் இடம் பெற்றுள்ளன.அவற்றில் பார்வையாளர்களை அதிகம் ஈர்ப்பது 'ஹவுஸ் ஆப் ஆர்ட்டிஸ்டிக்ஸ்' என்ற நிறுவனத்தின் பஞ்சலோக சிலைகள் இடம் பெற்றுள்ள அரங்குதான்.
மக்களிடம் பஞ்சலோக சிலைகளை கொண்டு போய்ச்சேர்க்கும் வகையில் பாதிக்கு பாதி வரையிலான தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
மோகன்,ரமேஷ்,சம்பத்,சுரேஷ்,உமேஷ் ஆகிய ஐந்து பேரும் சென்னை கவின் கலைக்கல்லுாரியில் சிற்ப சாஸ்திர வகுப்பில் படிக்கும் போது ஒன்றாக படித்த நண்பர்கள்.
படித்து முடித்ததும் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் பஞ்சலோக கலைப்பொருட்கள் தயாரித்து விற்கும் 'ஹவுஸ் ஆப் ஆர்ட்டிஸ்டிக்ஸ்' என்ற நிறுவனத்தை துவக்கி கடந்த 35 வருடங்களாக நடத்தி வருகின்றனர்.தற்போது பல கிளைகளைக் கொண்டு செயல்படும் இந்த நிறுவனத்தில் சார்பில் கோவிலுக்கு தேவையான கலச்ங்கள்,திருவாட்சிகள்,பூஜை சாமான்களை பிரதானமாக தயாரிக்கின்றனர்.
தரம் காரணமாக நாடு முழுவதும் உள்ள பல்வேறு கோயில்களில் இவரது தயாரிப்புகள் இடம் பெற்றுள்ன.அயோத்தி ராமர் கோயில் கும்பாபிேஷகத்தில் கலந்து கொண்ட பிரமுகர்கள் 500 பேருக்கு ராமர் சிலையை பரிசாக கொடுத்தனர், அந்த பரிசுச் சிலைகள் யாவும் இவர்கள் தயாரித்தது.இதே போல அயோத்தியில் உள்ள ராமர் குளத்தில் உள்ள ஹோலிகுண்ட் என்ற இடத்தில் 750 கிலோ எடையுள்ள சூரியனார் சிலையை அமைத்துள்ளனர் அது ஒரு அதிசயமாக பேசப்படுவதாகும்.
சென்னை வடபழநி ஆண்டவர் கோவிலிக்கு செய்து கொடுத்த பீடம் திருவாட்சி வேல் உருவம் பொறித்த சாளரம்,விளக்கு ஆகியவை பலரது பாராட்டைப் பெற்றதாகும்.ஆயிரம் வருடமானாலும் இவை அழியாது நிலைத்து நிற்கும் தன்மை கொண்டதாகும்.
கோவிலுக்கு மட்டுமின்ற பலரது வீடுகள்,நிறுவனங்களின் பூஜை அறைகளையும்,சுவாமி சிலைகளையும் செய்து கொடுத்துள்ளனர்.
சோழர் திருமேனி வடிவம் என்று சொல்லக்கூடிய பஞ்ச லோக சிற்பங்கள் செய்வதில் வல்லவர்களான இவர்களின் சிற்பங்களும் அதில் உள்ள ஆபரணங்களும் மிக நுட்பமானவை.
உள்ளங்கையில் அடங்கக்கூடிய ஒன்றரை இஞ்ச் சிலை முதல் 35 அடி உயரமுள்ள சிலை வரை வாடிக்கையாளர் விருப்பப்படி செய்துதருகிறோம்.
திருவண்ணாமலை சேஷாத்ரி சுவாமிகள்,காஞ்சி சுவாமிகள்,மதுரை மீனாட்சி,காளி,முருகன்,ராமர் என்று இருநுாறுக்கும் அதிகமான பஞ்சலோக சிலைகள் எங்களிடம் விற்பனைக்கு உள்ளது இதனை மக்களிடம் கொண்டு செல்வதற்காக முதன் முதலாக புத்தக்காட்சியின் வெளி அரங்கில் பேச்சரங்கத்திற்கு எதிரே பிரம்மாண்டமாக ஸ்டால் அமைத்துள்ளோம்.பஞ்ச லோக சிலைகள்,தங்க முலாம் பூசிய சிலைகள் என்று இங்கு விற்கப்படும் சிலைகள் ஐம்பது சதவீதம் வரை தள்ளுபடி விலையில் விற்கப்படுகிறது.இது தொடர்பாக கூடுதல் விவரங்கள் அறிய தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்:6383910192,6383910194.
-
--எல்.முருகராஜ்