சி.ஐ.எஸ்.எப்., ஜவான் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை:சூரத் விமான நிலையத்தில் சோகம்
சூரத்: சூரத் சர்வதேச விமான நிலையத்தில் சி.ஐ.எஸ்.எப்., ஜவான், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரி பர்வத் கூறியதாவது:
குஜராத் மாநிலத்தில் உள்ள சூர்த் சர்வதேச விமான நிலையத்தின் கழிவறையில் இன்று பிற்பகல் இந்த சம்பவம் நடந்தது.
அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்றோம். அங்கு சி.ஐ.எஸ்.எப்., எனப்படும் மத்திய தொழில் பாதுகாப்பு படையை சேர்ந்த ஜவான் கிஷன் சிங்,32 ஜெய்ப்பூரை சேர்ந்தவர் விமான நிலையத்தில் பணி செய்து கொண்டிருந்தவர், கழிவறைக்கு சென்றுள்ளார்.
அங்கு, தன்னிடம் இருந்த துப்பாக்கியை வயிற்றில் வைத்து தனக்கு தானே சுட்டுக்கொண்டார்.
இதனை அடுத்து அவர், தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டிருக்கிறார். அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என்று கூறிவிட்டனர்.
இந்த சம்பவத்தின் பின்னணியில் உள்ள நோக்கம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு போலீஸ் அதிகாரி பர்வத் கூறினார்.