அருங்காட்சியகத்தில் சிலை ஒப்படைப்பு

ஈரோடு: கோபியை அடுத்த அயலூர் கிராமத்தில் விளைநிலத்தில், சில மாதங்களுக்கு முன் ஒரு சிலை கிடைத்தது, கிராம நிர்வாக அலு-வலர் சக்திவேல் சிலையை மீட்டு, அலுவலகத்துக்கு கொண்டு சென்றார். கலெக்டர் மற்றும் அரசு அருங்காட்சியகத்துக்கு தகவல் அளித்துள்ளார்.


கோபி ஆர்.டி.ஓ., அறிவுறுத்தலின்படி, ஈரோடு அரசு அருங்-காட்சியர் ஜென்சியிடம், வி.ஏ.ஓ., சக்திவேல், சிலையை நேற்று ஒப்படைத்தார். காப்பாட்சியர் ஜென்சி கூறுகையில், 'சிலை, 12ம் நூற்றாண்டை சேர்ந்தது. கோவில் நுழைவு வாயிலில் வைக்கப்-படும் சிலையாகும். இதை சங்கநதி என தொல்லியல் ஆய்வா-ளர்கள் அழைக்கின்றனர்' என்றார்.

Advertisement