பாம்பன் பாலம்: கலாம் பெயர் சூட்ட வலியுறுத்தல்

ராமநாதபுரம்: -பாம்பன் பாலத்திற்கு முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பெயர் சூட்ட வேண்டும், என கலை இலக்கிய மன்றம் வலியுறுத்தியுள்ளது.

ராமநாதபுரத்தில் தமிழ்நாடு கலை இலக்கிய மன்ற கூட்டம் பேராவூரில் நடந்தது. நிர்வாகி சவுந்திரபாண்டியன் தலைமை வகித்தார். வட்டார கல்வி அலுவலர் தமிழரசி முன்னிலை வகித்தார்.

புதிதாக கட்டப்பட்டுள்ள பாம்பன் பாலத்திற்கு முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பெயர் சூட்ட வேண்டும். ராமேஸ்வரம் தீவுப்பகுதியில் திருவள்ளுவர் சிலை அமைத்து பெருமைப்படுத்த வேண்டும், என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கவியரங்கமும், கருத்தரங்கமும் நடந்தது. கவிஞர்கள், எழுத்தாளர்கள், பேராசிரியர்கள் பலர் பங்கேற்றனர்.

Advertisement