வித்தானுார் பள்ளி கட்டுமான பணி விரைந்து முடிக்க வலியுறுத்தல்

ராமநாதபுரம்: திருப்புல்லாணி ஒன்றியம் வித்தானுார் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளிக்குரிய புதிய கட்டடத்தை விரைவில் முடித்து, மாணவர் பயன் பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என பெற்றோர் வலியுறுத்தினர்.

வித்தானுார் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் கவுசல்யா தலைமையில் பெற்றோர்கள், மாணவர்கள் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இதில், பள்ளியில் போதுமான வகுப்பறைகள், கழிப்பறை வசதியின்றி மாணவர்கள் சிரமப்படுகின்றனர்.

புதிய கட்டடம் கட்டும் பணி இருஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடக்கிறது. மாணவர்கள் நலன்கருதி விரைவில் கட்டுமான பணிகளை முடிக்க கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தர விட வேண்டும் என வலியுறுத்தினர்.

Advertisement