சோலார் பம்ப் செட் அமைக்க திருவாடானை விவசாயிகள் ஆர்வம்

திருவாடானை: திருவாடானை பகுதியில் கோடை சாகுபடிக்கு கை கொடுக்கும் சோலார் பம்ப் செட் அமைக்க விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர். திருவாடானை தாலுகாவில் ஆண்டுதோறும் 26 ஆயிரத்து 700 எக்டேரில் விவசாயப் பணிகள் நடக்கிறது. பெரும்பாலான ஆண்டுகளில் பருவமழை தக்க நேரத்தில் பெய்யத் தவறுவதால் விவசாயம் பாதிக்கப்படுகிறது.

அதிலும் பயிர்கள் வளர்ச்சியடைந்து வரும் போது மழை பெய்யாததால் நெற்பயிர்கள் கருகி விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது.

இதனால் சோலார் மூலம் பம்ப் செட் அமைத்து விவசாயம் செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

டி.நாகனி ஊராட்சி புல்லாவயல் விவசாயிகள் கூறியதாவது:

மழையை நம்பிதான் விவசாயம் செய்ய வேண்டியுள்ளது. தற்போது திருவாடானையில் வேளாண் பொறியியல் துறை அலுவலர்கள் உதவியுடன் 70 சதவீதம் மானியத்தில் பம்ப் செட் அமைத்து சோலார் பேனல் அமைத்து தந்தனர்.

இதனால் கோடை விவசாயம் செய்வதில் பயனாக உள்ளது என்றனர்.

Advertisement