நகை திருடிய பெண் கைது



சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் அருகே, ஆர்.பி., புதுாரை சேர்ந்தவர் துாயவன், 44; இவரது மனைவி திவ்யா. இவர், நேற்று முன்தினம் காலை, வீட்டை பூட்டி விட்டு தோட்டத்திற்கு சென்றுள்ளார். பின், தோட்-டத்தில் வேலை செய்யும் ஆட்களுக்கு டீ வைத்துக்கொண்டு செல்வதற்காக, மதியம், 2:00 மணிக்கு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, வீட்டின் சாவி வேறு இடத்தில் இருந்துள்ளது. இதனால், சந்தேகமடைந்த அவர், வீட்டில் உள்ள நகைளை சரி-பார்த்துள்ளார். அப்போது, 4 பவுன் தங்கநகை, கொலுசு, 4,000 ரூபாய் பணம் காணாமல் போனது தெரியவந்தது.


இதுகுறித்து, திவ்யா சேந்தமங்கலம் போலீசில் புகாரளித்தார். புகார்படி, வீட்டின் அருகே இருந்த ஓட்டலில் உள்ள, 'சிசிடிவி' கேமராவை ஆய்வு செய்தனர். அதில், துாயவனின் அத்தை மரு-மகள் சுதா வந்து சென்றது தெரியவந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில், துாயவன் வீட்டில் நகைகளை திருடியதை ஒப்புக்-கொண்டார். இதையடுத்து, அவரை கைது செய்து, நகைகளை பறிமுதல் செய்தனர்.

Advertisement