காலி பணியிடங்களை நிரப்ப கோரிக்கை

விருதுநகர்: 2024 எஸ்.ஜி.டி., நியமனத்தேர்வு எழுதிய அனைத்து இடைநிலை ஆசிரியர் தேர்வர்கள் சார்பில், கலெக்டர் ஜெயசீலனிடம் அளித்த மனு:

தமிழகத்தில் உள்ள அரசு துவக்கப்பள்ளிகளில் 10 ஆண்டுகளுக்கு மேலாக காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. 8 ஆயிரத்திற்கும் மேல் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் உள்ளன. 2024ல் நடந்த எஸ்.ஜி.டி., நியமன தேர்வுக்கான விடைக்குறிப்பு தற்போது வரை வெளியாகாமல் உள்ளது. இத்தேர்வு எழுதி பலர் காத்திருக்கின்றனர். தகுதி இருந்தும் காலிப்பணியிடம் நிரப்பப்படாமல் காலதாமதம் செய்வதால் நாங்கள் தனியார் பள்ளிகளில் குறைந்த சம்பளத்தில் பணிபுரியும் நிர்பந்தம் உள்ளது.

நாளுக்கு நாள் அரசு துவக்கப்பள்ளிகளில் காலிப்பணியிடம் அதிகரித்து வருவதால் கற்றலும் பாதிக்கப்படுகிறது. எனவே தமிழக அரசு உடனடியாக காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். டெட் நியமன தேர்வுக்கான விடைக்குறிப்பை வெளியிட்டு முடிவுகளை அறிவிக்க வேண்டும், என கேட்டுள்ளனர்.

Advertisement