நகராட்சி வேண்டாம் சின்னமூப்பன்பட்டி மக்கள் 

விருதுநகர்: விருதுநகர் சிவஞானபுரம் ஊராட்சிசின்ன மூப்பன்பட்டி ஊர்மக்கள், கலெக்டர் ஜெயசீலனிடம் கூறியதாவது:

எங்கள் பகுதியில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள ஏழைகள் அதிகம் உள்ளனர். இங்கு காட்டு நாயக்கர், வலையர், சீர்மரபினர் ஆகிய மக்கள் நுாறு நாள் வேலையை மட்டுமே நம்பி உள்ளனர். எங்கள் கிராமத்தை சிவஞானபுரம் ஊராட்சியுடன் தொடர அனுமதிக்க வேண்டும் அல்லது தனி ஊராட்சியாக உருவாக்க வேண்டும்.

ஒரு வேளை நகராட்சியோடு இணைக்கப்பட்டால் எங்கள் விளைநிலங்கள் பிளாட்டுகளாக மாறி எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். கால்நடைகள் வளர்ப்பு பாதிக்கப்படும். எனவே மாவட்ட நிர்வாகம் சின்னமூப்பன் பட்டி கிராமத்தை நகராட்சியோடு இணைக்க வேண்டாம், என்றனர்.

Advertisement