சாத்துார் புதுப்பாளையத்தில் ரோடு தேவை

சாத்துார்: சாத்துார்ஊராட்சி ஒன்றியம் அயன் சத்திரப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட புதுப்பாளையத்தில் மக்கள் ரோடு வசதி இன்றி அவதிப்படுகின்றனர்.

புதுப்பாளையத்தில் முதல் தெரு இரண்டாவது தெரு ரோடு வசதியின்றி மக்கள் அவதிப்படுகின்றனர். இங்கு வீடுகளில் இருந்து வெளியாகும் கழிவுநீர் பாதையில் தேங்கி நிற்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட சிமெண்ட் ரோடு தற்போது பெயர்ந்து மண் சாலையாக மாறிவிட்டது. சிறிய மழை பெய்தாலும் பாதையில் கழிவுநீரோடு மழை நீரும் தேங்கி நிற்கிறது.

புதுப்பாளையத்தில்முதல் மற்றும் இரண்டாவது தெருவில் பேவர் பிளாக் ரோடு அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Advertisement