ஊராட்சி பணியாளர்கள் கவுரவிப்பு

பெண்ணாடம் : பெண்ணாடம் அடுத்த சவுந்திரசோழபுரம் ஊராட்சியில், ஊராட்சி பணியாளார்களுக்கு கவுரவிப்பு நிகழ்ச்சி நடந்தது.

தமிழகத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியங்கள், ஊராட்சிகளின் பதவிக்காலம் இன்றுடன் (5ம் தேதி) முடிவடைகிறது.இதற்காக, சவுந்திரசோழபுரம் ஊராட்சியில் உள்ள துப்புரவு பணியாளர்கள், டேங்க் ஆபரேட்டர், ஊராட்சி செயலர், வார்டு கவுன்சிலர்களின் பணிகளை பாராட்டி, ஊராட்சி தலைவர் நடேசன் அவர்களுக்கு சால்வை அணிவித்து, இனிப்பு வழங்கி கவுரவித்தார். அப்போது, துணை தலைவர் துர்காதேவி ஆறுமுகம், ஊராட்சி செயலர் குமார், வார்டு கவுன்சிலர்கள், துப்புரவு பணியாளர்கள், டேங்க் ஆபரேட்டர்கள், கிராம மக்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement