பெண்ணாடத்தில் வளர்ச்சி பணிகள்: கலெக்டர் ஆய்வு
பெண்ணாடம் : பெண்ணாடம் பகுதி ஊராட்சிகளில் நடந்து வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை கலெக்டர் சிபி ஆதித்ய செந்தில்குமார் ஆய்வு செய்தார்.
நல்லுார் ஒன்றியம், பெண்ணாடம் அடுத்த வெண்கரும்பூர் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் நடந்து தொகுப்பு வீடுகள் பழுது பார்க்கும் பணி, கலைஞர் கனவு இல்லம் ஆகிய திட்டங்களில் கான்கிரீட் வீடுகள் கட்டுவது உட்பட பல்வேறு வளர்ச்சிப் பணிகள் நடந்து வருகிறது.
இப்பணிகளை கலெக்டர் சிபி ஆதித்ய செந்தில்குமார் நேற்று ஆய்வு செய்தார்.
அப்போது, வீடுகள் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க, ஊராட்சி தலைவர் மற்றும் ஒன்றிய அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.
அப்போது, நல்லுார் ஒன்றிய பி.டி.ஓ.,க்கள் முருகன், சண்முகசிகாமணி, துணை பி.டி.ஓ., செல்வக்குமார், ஒன்றிய பொறியாளர் சுகந்தி, அந்தந்த ஊராட்சி தலைவர்கள். ஊராட்சி செயலர்கள், வார்டு கவுனசிலர்கள், பயனாளிகள் உட்பட பலர் உடனிருந்தனர்.
இதேபோன்று, தாழநல்லுார் ஊராட்சியில் ஆதிதிராவிட நல துவக்கப்பள்ளி சுற்றுச்சுவர் கட்டும் பணி, நரசிங்கமங்கலத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டப்பணி, பெ.பூவனுார் ஊராட்சி, ஓ.கீரனுார் சாலை வசதி ஆய்வ, மாளிகைக்கோட்டம் ஊராட்சியில் கலைஞர் கனவு இல்லம் வீடுகள் கட்டும் பணிகளை ஆய்வு செய்தார்.