மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

ராமநாதபுரம்: உத்தரகோசமங்கை அருகே மேலச்சீத்தை பகுதியை சேர்ந்த கலைவாணன் மகன் பாரமலைகண்ணன் 32.

இவர் தனது சித்தப்பா பூமி புதியதாக கட்டி வரும் வீட்டில் தண்ணீர் தொட்டியில் மின் மோட்டரை பொருத்திய போது மின்சாரம் தாக்கி துாக்கி வீசப்பட்டார்.

உத்தரகோசமங்கை ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொண்டு வந்தபோது அவரை பரிசோதித்த டாக்டர் பாரமலை கண்ணன் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார். உத்தர கோசமங்கை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement