நேரு பூங்காவில் பார்வையாளர்கள் கூட்டம்

கோத்தகிரி; கோத்தகிரி நேரு பூங்காவில் உள்ளூர் மக்களின் வருகை அதிகரித்து வருகிறது.

கோத்தகிரி நகரின் மையப்பகுதியில் நேரு பூங்கா அமைந்துள்ளது. மாவட்டத்தில் நடக்கும் கோடை விழாவின் முதல் நிகழ்ச்சியாக, இப்பூங்காவில் காய்கறி கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். சீசன் நாட்கள் உட்பட, வார இறுதி நாட்களில் பூங்காவில் பார்வையாளர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

பார்வையாளர்களை கவரும் வகையில், பூங்கா புல்தரை நேர்த்தியாக வெட்டப்பட்டுள்ளது. மேலும், நடைப்பாதை மற்றும் இருக்கைகள் சிறப்பாக பராமரிக்கப்பட்டு, தற்போது பொலிவுடன் காணப்படுகிறது.

மாவட்டத்தில், அதிகாலை நேரத்தில் பனிப்பொழிவு இருந்தாலும், பகல் நேரத்தில் வெயிலான காலநிலை நிலவுகிறது. இதனால் பொழுதை கழிக்க, உள்ளூர் மக்கள் அதிக அளவில் பூங்காவுக்கு வந்து செல்கின்றனர். விடுமுறை நாளான நேற்று, கூடுதல் எண்ணிக்கையில் பள்ளி குழந்தைகளுடன், பெற்றோரும் வந்து, பூங்காவின் அழகை கண்டுக்களித்தனர்.

Advertisement