பள்ளி, கல்லுாரி செய்திகள்...
பெற்றோர் கூட்டம்
மதுரை: திருவேடகம் விவேகனாந்த கல்லுாரியில் பெற்றோர் கூட்டம் மூன்று நாட்கள் நடந்தது. முதல்வர் வெங்கடேசன் தலைமை வகித்தார். ஜன.2ல் இளநிலை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கும், ஜன.3 ல் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கும், ஜன. 4 ல் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கும், முதுநிலை மாணவர்களுக்கும் தனித் தனியாக நடந்தது.
கல்லுாரிச் செயலர் சுவாமி வேதானந்த, சுவாமி அத்யாத்மானந்த, துணை முதல்வர் கார்த்திகேயன், கல்லுாரி தேர்வுக் கட்டுப்பாடு அலுவலர் ஜெயசங்கர், சதீஷ்பாபு பங்கேற்றனர்.
நிறுவனர் பிறந்தநாள்
மதுரை: கே.எல்.என்., பொறியியல் கல்லுாரி நிறுவனத் தலைவர் கிருஷ்ணனின் பிறந்தநாள் விழா நடந்தது. அவரது சிலைக்கு மாலை அணிவித்தனர். பிளஸ் 2 ல் அதிக மதிப்பெண் பெற்றவர்கள், பத்தாண்டு பணி நிறைவு செய்தபேராசிரியர், அலுவலர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. சிறப்பு விருந்தினராக லயன் அமைப்பின் ஓய்வுபெற்ற துணை இயக்குனர்காசி, கே.எல்.என்.,சவுராஷ்டிரா கல்லுாரி கவுன்சில் தலைவர் கார்த்திக், முதல்வர் ராம்பிரசாத், கல்லுாரி பொருளாளர் சிவபிரசாத், பேராசிரியர் ரவிக்குமார், ஜெயஸ்ரீ ஸ்பன் பாண்டு நிறுவனர் ராம்பிலாஸ் பாபு கலந்து கொண்டனர்.