போக்குவரத்து கழக ஓய்வூதியர் வலியுறுத்தல்

மதுரை ;மதுரையில் போக்குவரத்து ஓய்வூதியர் எச்.எம்.எஸ்., சங்க மதுரை கிளை கூட்டம் நடந்தது. தலைவர் அங்குசாமி தலைமை வகித்தார். பொருளாளர் ஒச்சாத்தேவன், சவுந்திரராஜ், சேதுராமன் பங்கேற்றனர்.

செயலாளர் ஷாஜகான் தீர்மானங்களை விளக்கினார். பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக மத்திய, மாநில பேரவை சங்கங்கள் மற்றும் ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சங்கத்தை அரசு போக்குவரத்து செயலர் பணீந்திர ரெட்டிஅழைத்து 12வது ஒப்பந்த பேச்சு வார்த்தையை நடத்த வேண்டும்.

ஓய்வூதியர்களின் 106 மாத அகவிலைப்படி உயர்வு நிலுவைத் தொகையை வழங்க அரசு சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும். தேவைக்கேற்ப டிரைவர், கண்டக்டர் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். தனியார் நிறுவனங்களிடம் பணியாளர்களை ஒப்பந்த முறையில் தேர்வு செய்யும் திட்டத்தை கைவிட வேண்டும்.

நிர்வாக சீர்கேடுகளை கண்டுகொள்ளாமல் இருப்பதை கைவிட்டு, போக்குவரத்து கழகத்தை லாப நோக்குடன் செயல்படுத்த தேவையான துரித நடவடிக்கைகளை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் எனத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement