பள்ளி மாணவர்களுக்கு கோ கோ போட்டிகள்

திருப்பரங்குன்றம், ; மதுரை சவுராஷ்டிரா மகளிர் கல்லுாரியில் ஜன.18 முதல் ஜன. 20 வரை மாவட்ட அளவில் பள்ளி மாணவர், மாணவியருக்கான கோ கோ போட்டிகள் நடக்கிறது.

மதுரை மாவட்ட பள்ளிகள் பங்கேற்கலாம். விரும்பும் பள்ளி அணியினர் 70107 00324ல் ஜன. 13க்குள் முன்பதிவு செய்ய வேண்டும் என கல்லுாரி முதல்வர் பொன்னி தெரிவித்தார். கல்லுாரி செயலாளர் குமரேஷ், நிர்வாக குழு உறுப்பினர் வெங்கடேஸ்வரன் கூறியதாவது:

பள்ளி மாணவர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்தவும், வீரர்களை ஊக்கப்படுத்தும் வகையிலும் சவுராஷ்டிரா கல்லுாரி சார்பில் ஆண்டுதோறும் ஒரு விளையாட்டு போட்டி நடத்த திட்டமிடப்பட்டு, முதன்முறையாக கடந்தாண்டு கூடைப்பந்து போட்டிகள் நடத்தப்பட்டது. வரும் ஆண்டுகளில் தொடர்ந்து போட்டிகள் நடத்தப்படும் என்றனர்.

Advertisement