போதை ஒழிப்பு விழிப்புணர்வு
ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நடத்தப்பட்டது.இதன் திருப்பூர் மாவட்ட இளைஞர் அணி சார்பில், போதை ஒழிப்பு தொடர் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாநில அளவிலான இந்த விழிப்புணர்வு நிகழ்வு, திருப்பூர் மாவட்டத்தில் நேற்று துவங்கி வைக்கப்பட்டது.
மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சாதிக் பாஷா தலைமை வகித்தார். மாநில தலைவர் ஐதர் அலி துவங்கி வைத்தார். மாநில செயலாளர் ஹாலிதின் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.பஸ் ஸ்டாண்ட் மற்றும் சுற்றுப்பகுதியில் பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரம் வினியோகிக்கப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement