பசுமை நினைவுகளை பகிர்ந்த ஓய்வுபெற்ற காவல்துறையினர்

அவிநாசி : அவிநாசி, அணைப்புதுார் ஏ.கே.ஆர்., அகாடமி பள்ளி கலையரங்கில், கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில், 1975ம் ஆண்டு போலீசாராக பணியமர்த்தப்பட்டு, தற்போது ஓய்வு பெற்றுள்ளவர்களின் மலரும் நினைவுகளை பகிர்ந்திடும் வகையில், பொன்விழா ஆண்டு சங்கம விழா நடந்தது. பழனிசாமி தலைமை வகித்தார். ஓய்வுபெற்ற எஸ்.ஐ. ராஜு முன்னிலை வகித்தார். வாசுதேவன் வரவேற்றார்.

திருப்பூர் மாநகராட்சி ஆணையர் ராம மூர்த்தி, மாவட்ட கருவூல அதிகாரி முருகேசன், அரிமா சங்கம் கீதா கணேசன், பள்ளி தாளாளர் லட்சுமி நாராயணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

எழுபதுக்கும் மேற்பட்டோர், பணியின் போது ஏற்பட்ட சுவாரசியமான நினைவுகளை பகிர்ந்தனர்; சவாலான வழக்குகளுக்கு தீர்வு கண்டதை விளக்கினர். நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டன. ஓய்வு பெற்ற எஸ்.ஐ., நடராஜன் நன்றி கூறினார்.

Advertisement