கலைத்திருவிழா

நெல்லிக்குப்பம் : மாநில கலைத் திருவிழாவில் நெல்லிக்குப்பம் ஆர்.சி. நடுநிலைப்பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றனர். பள்ளி மாணவர்களுக்கான கலைத் திருவிழா கோயம்புத்தூர் மற்றும் திருப்பூரில் நடந்தது.

அதில் பங்கேற்ற நெல்லிக்குப்பம் ஆர்.சி. நடுநிலைப்பள்ளி மாணவர்கள் சிலம்பம், ஒயிலாட்டம், கோலாட்டம், கும்மியாட்டம் உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்றனர். மாநில போட்டியில் வெற்றி பெற்று, பள்ளிக்கு பெருமை சேர்ந்த மாணவர்களை ஆசிரியர்கள் அந்தோணி அம்மாள், மேக்லின், கமலி, இந்திரா ஆகியோர் பரிசு வழங்கி, பாராட்டினர்.

Advertisement