என்றும் இனிக்கும் நினைவுகள்

அவிநாசி ; அவிநாசி, கைகாட்டிப்புதுார் வாரச்சந்தை அருகில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 1985 முதல் 1992ம் ஆண்டு வரை படித்த மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி,அவிநாசி, ரோட்டரி ஹாலில் நடைபெற்றது.

பொள்ளாச்சி ரங்கராஜன் இசை நிகழ்ச்சி நடந்தது. வங்கி ஊழியர்களான முன்னாள் மாணவர்கள் திவாகரன், பாஸ்கர், சுதாகரன் ஆகியோரின் பொருளாதாரம் மற்றும் முதலீடு குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது. முன்னாள் மாணவர்கள், என்றும் இனிமை தரக்கூடிய பள்ளிக்கால பசுமை நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

பெங்களூரு, கோவை, ஈரோடு, சேலம், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்தனர். நிகழ்ச்சிக்கு சுரேஷ், விஜய், ஸ்டார் சுரேஷ், சிவகுமார், ரவிக்குமார், ஆனந்த், கார்த்திக் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

Advertisement