நடுவீரப்பட்டு சாலை விரிவாக்க பணி துவக்கம்

நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு கெடிலம் ஆறு - குயிலாப்பாளையம் வரை சாலை அகலப்படுத்தும் பணி துவங்கியது.

நடுவீரப்பட்டு-பாலுார் குயிலாப்பாளையம் செல்லும் சாலையில், குறிஞ்சிப்பாடி நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கெடிலம் ஆறு பாலம் வரை கடந்த ஆண்டு அகலப்படுத்தப்பட்டது.

கடலுார் நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள நடுவீரப்பட்டு கெடிலம் ஆறு பாலம் முதல் பாலுார் குயிலாப்பாளையம் வரையிலான சாலை அகலப்படுத்தவில்லை.

இதனால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.

இதனால் இந்த இடைவழி சாலையை இருவழிச் சாலையாக மாற்றிட சி.ஆர்.ஐ.டி.பி., திட்டத்தின் கீழ் ரூ.1.53 கோடி மதிப்பில் சாலை அகலப்படுத்தும் பணி தொடங்கியது. சாலையை அகலப்படுத்திட பள்ளம் தோண்டி, கிராவல் கொட்டும் பணி நடந்து வருகிறது.

Advertisement