லாட்டரி விற்ற இருவர் கைது
பண்ருட்டி : லாட்டரி சீட்டு விற்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.
பண்ருட்டி இன்ஸ்பெக்டர் வேலுமணி, சப் இன்ஸ்பெக்டர் தங்கவேல் மற்றும் போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது, சத்தியமூர்த்தி தெருவில், லாட்டரி சீட்டு விற்ற அதேபகுதியை சேர்ந்த விஸ்வநாதன்,54; விழுப்புரம் மாவட்டம் திருப்பாச்சானுார் காவனிக்குப்பம், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கிருஷ்ணதாஸ் மகன் சுரேஷ்,44; ஆகியோரை கைது செய்தனர்.
இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement