விருதை ஸ்டேஷனில் எஸ்.பி., திடீர் ஆய்வு

விருத்தாசலம் : விருத்தாசலம் போலீஸ் ஸ்டேஷனில் நேற்று எஸ்.பி., ஜெயக்குமார் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள், போதை பொருள் தடுப்பு, பெண்களுக்கு எதிரான குற்ற தடுப்பு நடவடிக்கை குறித்து போலீசாரிடம் கேட்டறிந்தார்.

பின்னர், குற்ற பதிவேடுகளை ஆய்வு செய்தார். மேலும், வழக்குகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார். அப்போது, டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன், சப் இன்ஸ்பெக்டர் சந்துரு மற்றும் போலீசார் உடனிருந்தனர்.

Advertisement