விமான நிலைய பணிக்கு பயிற்சி இளைஞர்களுக்கு கலெக்டர் அழைப்பு

கடலுார் : விமான நிலையத்தில் பல்வேறு பணிகளில் சேர்வதற்கான பயிற்சியில் பங்கேற்க கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார்.

அவரது செய்திக்குறிப்பு:

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்களை தாட்கோ வழங்கி வருகிறது.

அதன்படி, விமான நிலைய பயணிகள் சேவை அடிப்படை படிப்பு, சரக்கு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி அடிப்படை படிப்பு, சுற்றுலா துறையின் அடிப்படை படிப்புகள் மற்றும் விமான பயண முன்பதிவு போன்ற பயிற்சிகளுக்கு சான்றிதழ்களை வழங்கி வேலை வாய்ப்பு பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இப்பயிற்சி பெற பிளஸ் 2 அல்லது பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்ற 18 முதல் 23 வயதிற்கு உட்பட்ட பட்டியலினத்தவாராக இருக்க வேண்டும்.

பயிற்சிக்கான கால அளவு 6 மாதம். விடுதியில் தங்கி படிக்கும் வசதியும், பயிற்சிக்கான செலவீன தொகை ரூ.95 ஆயிரம், தாட்கோ வழங்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement