பல்கர் லாரி டேங்க் உடைந்து டீசல் சாலையில் ஓடியதால் பரபரப்பு
பெண்ணாடம் : பெண்ணாடம் அருகே பல்கர் லாரியின் டீசல் டேங்க் உடைந்து சாலையில் டீசல் ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அரியலுார் மாவட்டம், தளவாய் அருகே உள்ள தனியார் சிமென்ட் ஆலையில் சிமென்ட் ஏற்ற, கேரளாவில் இருந்து பல்கர் லாரி வந்தது.
நேற்று காலை 8:00 மணிக்கு, பெண்ணாடம் அடுத்த பெ.பொன்னேரி ரயில்வே பாலம் அருகே ரவுண்டானாவில் வளைந்தபோது, ரவுண்டானா கட்டையில் உரசியதில், டீசல் டேங்க் உடைந்து சாலையில் டீசல் கொட்டி, சாலையில் ஓடியது.
பொதுமக்கள் கூச்சலிட்டதை கண்ட டிரைவர், லாரியை நிறுத்தி டீசல் வெளியேறுவதை தடுக்க முயன்றார்.
அதற்குள், அப்பகுதி மக்கள் குடம், பக்கெட் உள்ளிட்ட பாத்திரங்களில் டீசலை பிடித்து சென்றனர்.
பின்னர் டிரைவர், வாடகை பாத்திரங்களை கொண்டு வந்து மீதமுள்ள டீசலை பிடித்து வைத்தார்.
இச்சம்பவத்தால் பெ.பொன்னேரில் சற்று நேரம் பரபரப்பு நிலவியது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement