பஸ் சக்கரத்தில் சிக்கியவர் பலி

சிதம்பரம் : பஸ் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்தவர் சக்கரத்தில் சிக்கி இறந்தார்.

சீர்காழி அடுத்த பச்சைபெருமா நல்லுாரை சேர்ந்தவர் காரல்மார்க்ஸ், 48; இவர், நேற்று முன்தினம், சிதம்பரம் பஸ் நிலையத்தில் இருந்து வீட்டிற்கு செல்வதற்காக தனியார் பஸ்சில் ஏறினார். பின் படிக்கட்டில் நின்றிருந்தபோது, டிரைவர் பஸ்சை பின்னால் எடுத்துள்ளார். அப்போது, காரல்மார்க்ஸ் தவறி கீழே விழுந்தார். அவர் மீது பஸ் சக்கரம் ஏறியது.

அதில் படுகாயமடைந்த காரல்மார்க்சை அங்கிருந்தவர்கள் மீட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் இறந்தார். இதுகுறித்து சிதம்பரம் நகர போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement