புகார் பெட்டி...

மின் விளக்கு எரியுமா?



தவளக்குப்பம் - அபிேஷகப்பாக்கம் சாலை, தெப்பக்குளம் அருகே மின் விளக்கு எரியாமல் இருப்பதால், இரவு நேரத்தில் அவ்வழியே செல்லும் பெண்கள் அச்சமடைகின்றனர்.

புஷ்பா, தவளக்குப்பம்.

வாய்க்காலில் அடைப்பு



மேட்டுப்பாளையம், சிவாஜி நகர் சாலையில், வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி நிற்கிறது.

பாலாஜி, இந்திரா நகர்.

குண்டும் குழியுமான சாலை



கதிர்காமம், ராகவேந்திரா நகர் சாலை மிகவும் குண்டும், குழியுமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

பிரபாகர், கதிர்காமம்.

சாலைப் பணி மந்தம்



நைனார்மண்டபத்தில், இணைப்பு சாலை அமைக்கும் பணி ஆமை வேகத்தில் நடப்பதால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

மதி, அரியாங்குப்பம்.

Advertisement