தெற்கு ஆசிய கிரிக்கெட் போட்டி புதுச்சேரி வீரர்கள் சாதனை

புதுச்சேரி : நேபாளத்தில் நடந்த தெற்கு ஆசிய டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டியில் இந்தியா அணியில் பங்கேற்ற புதுச்சேரி வீரர்கள் சாதனை படைத்தனர்.

இந்திய அரசின் விளையாட்டுத் துறை மூலம், தெற்கு ஆசிய அளவிலான டென்னிஸ் பந்து கிரிக்கெட் சாம்பியன் ஷிப் போட்டி 2003--24 நேபாளம் நாட்டில் நடந்தது. இதில், 6 நாடுகளில் இருந்து வீரர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டியில், டென்னிஸ் பால் கிரிக்கெட் அசோசியேஷன் ஆப் பாண்டிச்சேரி சார்பில், புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் இந்திய அணியில் கலந்து கொண்டனர்.

இறுதிப்போட்டி, நேபாளம், போக்ரா ரங்கசாலா மைதானத்தில் நடந்தது.

இதில் இந்திய ஆடவர் அணி பங்களாதேஷ் நாட்டை வெற்றி பெற்றது. மகளிர் அணியினர் இறுதி போட்டியில் நேபாளம் நாட்டை வென்றது.

புதுச்சேரி வீரர்கள் தங்களுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியின் வெற்றிக்கு வழிவகுத்தனர். நாடு திரும்பிய வீரர்களை புதுச்சேரி பஸ் நிலையத்தில் டென்னிஸ் பால் கிரிக்கெட் அசோசியேஷன் ஆப் பாண்டிச்சேரி சங்க உறுப்பினர்கள் மற்றும் செயலாளர் ரத்தினபாண்டியன், இந்தியன் டென்னிஸ் பால் கிரிகெட்டர் பழனிவேல், இன்ஸ்பெக்டர் கோகுலகிருஷ்ணன், ஆடிட்டர் ஞானவேல் வரவேற்று வாழ்த்து தெரிவித்தனர்.

Advertisement