தவறாக விளக்கம் சொன்ன துரைமுருகன்; திருத்தம் சொன்ன முதல்வர் ஸ்டாலின்!

20


சென்னை: கவர்னர் ரவி பாதியில் வெளியேறியது குறித்து அமைச்சர் துரைமுருகன் விளக்கம் அளித்தார். அப்போது 2023ம் ஆண்டு என்பதற்கு பதில் 2003ம் ஆண்டு என குறிப்பிட்ட துரைமுருகனுக்கு, 2023ம் ஆண்டு என்று சொல்லுமாறு முதல்வர் ஸ்டாலின் திருத்தம் சொன்னார். பின்னர் துரைமுருகன் திருத்தம் செய்து கொண்டார்.


கவர்னர் ரவி சட்டசபையில் இருந்து பாதியில் வெளியேறியது குறித்து, அமைச்சர் துரைமுருகன் அளித்த விளக்கம்: 2023ம் ஆண்டு ஜனவரி திங்கள் 9ம் தேதி கவர்னர் ரவி உரையாற்றிய போது, அவை குறிப்பில் அச்சிடப்படாத சிலவற்றை சேர்த்தும் உரையாற்றினார். 2024ம் ஆண்டும் இதே நிலை நீடித்தது. 2023ல் அவையின் கண்ணியத்தை காக்க ஆளுநருக்கு எதிராக முதல்வர் தீர்மானம் கொண்டு வந்தார். முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு கவர்னர் பதவி குறித்த மாறுபட்ட கருத்து இருந்தாலும், கவர்னருக்கு உரிய மரியாதை அளித்தார்.



கடந்த ஆண்டு கவர்னர் அனுப்பிய கடிதத்திற்கு சட்டசபை மரபுகளை விளக்கி பதில் அனுப்பப்பட்டது.பதில் கடிதத்தில், தேசிய கீதம் கடைசியாக தான் பாடப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அச்சிடப்பட்ட பகுதிகள் மட்டுமே அவை குறிப்பில் இடம்பெறும் அரசமைப்பு சட்டத்தின் 176வது பிரிவின் கீழ் ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் கவர்னர் உரை நிகழ்த்துவார்.


தேசிய கீதம் பாடப்படவில்லை என்ற கருத்தை கவர்னர் ரவி கூறியுள்ளார். தமிழக சட்டசபை மரபுகளின்படி, தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், இறுதியில் தேசிய கீதமும் பாடப்படுவது வழக்கம்.தேசிய கீதம் மற்றும் அரசியலமைப்பு மீது தமிழக அரசு மிகுந்த மரியாதை கொண்டுள்ளது. அவையின் புகழை காக்க வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


கவர்னர் ரவி பாதியில் வெளியேறியது குறித்து அமைச்சர் துரைமுருகன் விளக்கம் அளித்தார். அப்போது 2023ம் ஆண்டு என்பதற்கு பதில் 2003ம் ஆண்டு என குறிப்பிட்ட துரைமுருகனுக்கு, 2023ம் ஆண்டு என்று சொல்லுமாறு முதல்வர் ஸ்டாலின் திருத்தம் சொன்னார். பின்னர் துரைமுருகன் திருத்தம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement