திருவள்ளூர்: புகார் பெட்டி; உயர்கோபுர மின்விளக்கு சீரமைக்கப்படுமா?

உயர்கோபுர மின்விளக்கு சீரமைக்கப்படுமா?



ஆர்.கே.பேட்டை அடுத்த, பெரிய நாகபூண்டியில், நாகவல்லி உடனுறை நாகேஸ்வரர் கோவில் உள்ளது. சித்தார் செல்லும் மாநில நெடுஞ்சாலையில், சின்ன நாகபூண்டியில் இருந்து நாகேஸ்வரர் கோவிலுக்கு தார் சாலை வசதி உள்ளது.

சின்ன நாகபூண்டிக்கு பேருந்து வாயிலாக வந்து இறங்கும் பக்தர்கள், அங்கிருந்து ஆட்டோவில் கோவிலுக்கு வந்து செல்கின்றனர். சின்னநாகபூண்டி பேருந்து நிறுத்தத்தில் உள்ள உயர்கோபுர மின்விளக்கு, ஓராண்டுகளாக பழுதடைந்துள்ளது.

இதனால், இரவு நேரத்தில் பேருந்துக்காக காத்திருக்கும் பக்தர்கள் மற்றும் பயணியர் அச்சத்தில் தவிக்கின்றனர். பழுதடைந்துள்ள உயர்கோபுர மின்விளக்கை சீரமைக்க வேண்டும் என, கேட்டுக் கொள்கிறேன்.

- -என். தர்மலிங்கம்,

நாகபூண்டி.

Advertisement