பனை விதை நடும் திட்டம் துவக்கி வைப்பு

காரியாபட்டி: காரியாபட்டி நீர்வழி பகுதிகளில் 10 ஆயிரம் பனை விதைகள் நடும் திட்டம் துவக்கி வைக்கப்பட்டது. கல்குறிச்சியில் மாவட்ட நபார்டு வங்கி, சீட்ஸ் நிறுவனம் இணைந்து பனை விதை நடும் திட்டத்தை, மாவட்ட வேளாண் துணை இயக்குனர் நாச்சியார் அம்மாள் துவக்கி வைத்தார்.

நீர் வழி பகுதி மேம்பாட்டு திட்டத்தின் மூலம் பராமரிக்கப்பட்டு வரும் நீர் வரத்து கால்வாய் இரு கரைகளிலும் 10 ஆயிரம் பனை விதைகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு முதற்கட்டமாக வடக்கு புளியம்பட்டியில் 5 ஆயிரம் பனை விதைகள் நடப்பட்டன. துணை இயக்குனர் ரமேஷ், வேளாண் அறிவியல் ஆராய்ச்சி மைய திட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வி கலந்து கொண்டனர்.

Advertisement