போலீஸ் செய்திகள்

பட்டாசு திரி பதுக்கல்; இருவர் கைது

விருதுநகர்: சங்கரலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் பாண்டி 44. இவர் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே பட்டாசு தயாரிக்க பயன்படுத்தும் 20 குரோஸ் கருந்திரிகளை பதுக்கி வைத்திருந்தார். ஒ.சங்கரலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார் 34. இவர் பஸ் ஸ்டாப் அருகே 25 குரோஸ் கருந்திரிகளை பதுக்கி வைத்திருந்தார். இவர்கள் இருவரையும் ஆமத்துார் போலீசார் கைது செய்தனர்.

பட்டாசு பறிமுதல்: ஒருவர் கைது

சாத்துார்: ஏழாயிரம் பண்ணை அன்பின் நகரத்தை சேர்ந்தவர் தானியேல், 50.வீட்டின் அருகில் தகர செட்டு அமைத்து பேன்சி ரக பட்டாசுகள் தயாரித்தார்.போலீசார் பட்டாசுகளை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். ஏழாயிரம்பண்ணை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement