விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

காரியாபட்டி: காட்டுப்பன்றிகளால் சேதப்படுத்தப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ. 40 ஆயிரம் இழப்பீடு வழங்க கோரி காரியாபட்டியில் காவிரி -வைகை- கிருதுமால் - குண்டாறு பாசன விவசாய சங்க கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாவட்டத் தலைவர் ராம்பாண்டியன் தலைமை வகித்தார். ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் மலைச்சாமி, சிவகங்கை மாவட்ட செயலாளர் அய்யனார் உட்பட பலர் பங்கேற்றனர். ஒன்றிய பொருளாளர் அருண் நன்றி கூறினார்.

Advertisement