சிறிய ரக தீயணைப்பு வாகனம் இன்றி குறுகிய தெருக்களில் வீரர்கள் சிரமம்

பரமக்குடி: பரமக்குடி தீயணைப்பு, மீட்புதுறையில் சிறிய ரக வாகனம் இல்லாததால், பெரிய வாகனத்தில் குறுகிய தெருக்களில் சென்று மீட்பு பணியில் ஈடுபட வீரர்கள் சிரமப்படுகின்றனர்.

பரமக்குடியில் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை சவுராஷ்டிர மேல்நிலைப்பள்ளி எதிரில் உள்ளது. பரமக்குடி 36 வார்டுகளுடன் மிகப்பெரிய நகராட்சியாக இருக்கிறது.

பெரும்பாலான ரோடுகள் குறுகிய அளவில் உள்ளதுடன், ஏராளமான சந்துகள் உள்ளன. இதனால் தீ விபத்து, பாம்பு பிடிப்பது என அனைத்து வகையான மீட்பு பணிகளுக்கும் 4500 லிட்டர் தண்ணீர் கொள்ளளவு கொண்ட பெரிய வாகனத்தைக் கொண்டு செல்லும்படி உள்ளது.

மேலும் அதிகமான கிராமப் பகுதிகளை உள்ளடக்கிய நிலையில், மீட்பு பணிக்கு விரைந்து செல்ல முடியாமல் நேர விரயம் ஏற்படுகிறது.

ஆகவே ராமநாதபுரத்தில் உள்ள சிறிய ரக மீட்பு வாகனத்தை போல் பரமக்குடியிலும் வழங்கிட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement