கண்மாயில் மூழ்கி வாலிபர் பலி
ராமநாதபுரம்: -ராமநாதபுரம் தங்கப்பா நகரை சேர்ந்த முசாபீர் மகன் ரபீக் 18. இவர் 9ம் வகுப்பு வரை படித்து விட்டு காதர் பள்ளிவாசல் பகுதியில் தந்தை முசாபீர் வைத்துள்ள பேக் தைக்கும் கடையில் தந்தைக்கு உதவியாக இருந்து வந்தார்.
நேற்று முன்தினம் மாலை பேராவூர் கண்மாயில் குளிக்க சென்றவர் இரவு 10:00 வரை வீடு திரும்பவில்லை.
பேராவூர் கண்மாயில் கரையில் ரபீக் உடைகள் இருந்ததால் நீரில் மூழ்கி உயிரிழந்தவர் உடலை மீட்டனர்.
கேணிக்கரை போலீசார் வழக்குப் பதிந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement