தே.மு.தி.க., ஆர்ப்பாட்டம் ..

ராமநாதபுரம்: -ராமநாதபுரத்தில் தே.மு.தி.க., வினர் அண்ணா பல்கலை பாலியல் பிரச்னையில் முறையாக நடவடிக்கை எடுக்க வேண்டும், என தமிழக அரசை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ராமநாதபுரம் அரண்மனைப்பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சிங்கை ஜின்னா தலைமை வகித்தார். இதில் சென்னை அண்ணா பல்கலையில் நடந்த பாலியல் பிரச்னை வழக்கினை துரிதப்படுத்தி விசாரிக்க வேண்டும்.

ரேஷன் கார்டுதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்க வேண்டும், என வலியுறுத்தி கோஷமிட்டனர்.

ராமநாதபுரம் நகர் செயலாளர் பாண்டி, மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Advertisement