வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் சிம்ரன் ஜீத் காலோன் வெளியீடு

மாவட்டத்தில் ராமநாத புரம், பரமக்குடி, முதுகுளத்துார், திருவாடானை ஆகியசட்ட சபை தொகுதிக்களுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் சிம்ரன் ஜீத் காலோன் வெளியிட்டார். மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு முன்னிலை வகித்தார்.

இறுதி வாக்காளர் பட்டியலில் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டசபைத் தொகுதிகளிலும் உள்ள 1374 பாகங்களில் 5,93,592 ஆண்களும், 6,03,570 பெண், 66 திருநங்கைகள் என 11,97,228 பேர் வாக்காளர்களாக உள்ளனர்.

இதற்கு முன்பு 2024 அக்.,29ல் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின்படி, நான்கு சட்டசபை தொகுதிகளிலும் 5,88,247 ஆண்களும், 5,92,688 பெண்கள், 66 திருநங்கைள் என 11,85,001பேர் வாக்காளர்களாக இருந்தனர்.

அதன்பிறகு பெற்ற மனுக்களின் அடிப்படையில் 8169 ஆண்கள், 10,064 பெண்கள், ஒரு திருநங்கை என 18,234 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். 2824 ஆண்கள், 3182 பெண்கள், ஒரு திருநங்கை என 6007 வாக்காளர்கள் நீக்கம் செய்துள்ளனர். 11,251 மாற்றுத்திறனாளிகள் இடம்பெற்றுள்ளனர்.

இப்பட்டியல் ஆர்.டி.ஓ., அலுவலகங்கள், உதவி ஓட்டுச்சாவடி அலுவலர்கள் அலுவலகம், நகராட்சி அலுவலகம், தாலுகா அலுவலகம் மக்களின் பார்வைக்கு வைக்கப்படும். www.elections.tn.gov.in மற்றும் www.nvsp.in ஆகிய இணையத் தளங்களில் பொதுமக்கள் சரிபார்த்து கொள்ளலாம்.

நிகழ்ச்சியில் பரமக்குடி சப்கலெக்டர் அபிலாஷா கவுர், ராமநாதபுரம் ஆர்.டி.ஓ., ராஜமனோகரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் பிரபாகர், தேர்தல் தாசில்தார் முருகேசன், அரசியல் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

Advertisement