தேசிய நுகர்வோர் மாநாடு
மதுரை: மதுரையில் பெண்கள் நுகர்வோர் பாதுகாப்புச் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் தேசிய நுகர்வோர் மாநாடு நடந்தது.
நுகர்வோர் ஒருங்கிணைப்பு கவுன்சில் சேர்மன் லியாகத் அலி தலைமை வகித்தார். சங்க நிறுவனர் பாக்கியலட்சுமி வரவேற்றார்.
ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி தெய்வராஜ் பேசுகையில், ''நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் மூலம் ரூ.ஒரு கோடி வரை
தொடர்புடைய புகார்கள் மாவட்ட நுகர்வோர்ஆணையத்திலும், ரூ.ஒரு கோடி முதல் ரூ.10 கோடிவரை மாநில அளவிலான ஆணையத்திலும், ரூ.10 கோடிக்கு மேல்தேசிய ஆணையத்திலும் அளிக்கலாம். குறைபாடு கண்டறியப்பட்ட நாளில் இருந்து 2 ஆண்டுக்குள் புகார் அளிக்க வேண்டும்'' என்றார்.
பெட்காட் சேர்மன் சொக்கலிங்கம் நன்றி கூறினார். முன்னாள் பொதுச் செயலாளர் ஹென்றி திபாங்கே, சங்க இணைச் செயலாளர் பரமேஸ்வரி, குடிமக்கள் நுகர்வோர் குடிமை நடவடிக்கை குழு நிர்வாக இயக்குநர் சரோஜா, கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றனர்.