கட்டண வார்டின் வருவாய் ரூ.1 கோடி

மதுரை: மதுரை அரசு மருத்துவமனையில் கட்டண பிரிவு வார்டின் மூலம் ஒன்றரை ஆண்டுகளில் ரூ.ஒருகோடி வருவாய் கிடைத்துஉள்ளது.

டீன் அருள் சுந்தரேஷ்குமார் கூறியதாவது:

2023 மார்ச் 2ம் தேதி அரசு மருத்துவமனையின் தீவிர விபத்து பிரிவு வளாகத்தில் 8 படுக்கைகள், பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் 8 படுக்கைகளுடன் கூடிய கட்டணவார்டு துவக்கப்பட்டது. இதுவரை 919 நோயாளிகள், அவர்களது உறவினர்கள் பயன்பெற்றுஉள்ளனர்.

ஒவ்வொரு அறையிலும் ஏசி, டிவி, சோபா, நோயாளிகள், உறவினருக்கென தனிப்படுக்கை, கழிப்பறை உட்பட அனைத்து வசதிகளும் உள்ளன. இந்த கட்டண அறையில் தங்குவதற்கு மட்டும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

மருத்துவ பரிசோதனை, மருந்துகள், சிகிச்சை அனைத்தும் இலவசம். இந்த வார்டின் மூலம் ரூ.ஒரு கோடியே ஒரு லட்சத்து 35ஆயிரத்து 200 வருவாய் கிடைத்துள்ளது என்றார்.

Advertisement