பழநியில் பத்திரம் பதிவதில் சிக்கல்
பழநி: பழநி நகரில் பெரியப்பா நகர், சத்யா நகர், இட்டேரி ரோடு, தெற்கு அண்ணா நகர், குரும்பபட்டி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து நகராட்சிக்கு மாற்றப்பட்டது.
பத்திரப்பதிவு துறைக்கும், நகராட்சிக்கும் உள்ள தொடர்பு முறையாக இணைக்கப்படாததால் அதற்கான சர்வே எண்களுக்கு பத்திரப்பதிவு அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்வதில் சிரமம் ஏற்படுகிறது.
இதில் உட்பிரிவு செய்யப்பட்ட இடங்களுக்கு பட்டா பெறுவதிலும், அந்த சொத்து பத்திரபதிவு செய்வதிலும் சிரமம் ஏற்படுகிறது.
பாலசமுத்திரம் பகுதியில் வக்பு வாரியம் தொடர்பான தடையில்லா சான்று பெற்றால் மட்டுமே அப்பகுதியில் பத்திர பதிவு செய்ய இயலும் என்ற நிலை உள்ளதால் அப்பகுதி மக்களும் அவர்களுடைய சொத்துக்களை பெயர் மாற்றம், அடகு வைத்தல், பதிவு செய்தல், பாகப்பிரிவினை போன்றவை செய்ய முடியாமல் சிரமப்படுகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement