மேலச்சொக்கநாதபுரத்தில் ரூ.1.59 கோடியில் பாலம், ரோடு பணி துவக்கம்

போடி: போடி அருகே மேலச்சொக்கநாதபுரம் விலக்கு முதல் மேலச்சொக்கநாதபுரம் வரை ரூ.1.59 கோடி செலவில் ஒரு கி.மீ., தூரம் நெடுஞ்சாலை துறை மூலம் ரோடு அமைக்கும் பணி நடந்து வருகிறது.

போடி அருகே மேலச்சொக்கநாதபுரம் விலக்கு முதல் மேலச்சொக்கநாதபுரம் வரையிலான ரோடு சேதமடைந்து குண்டும், குழியுமாக இருந்தது.

இதனால் பொதுமக்கள் நடந்தும், வாகனங்களில் செல்ல சிரமம் அடைந்தனர்.

ரோடு வசதி செய்து தர கோரி கிராம மக்கள் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் வலியுறுத்தினர்.

இதனை ஒட்டி முதல் கட்டமாக ரோட்டின் இருபுறமும் அரை கி.மீ., தூரம் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

தற்போது நெடுஞ்சாலைத்துறை மூலம் ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.1.59 கோடி செலவில் மேலச்சொக்கநாதபுரம் விலக்கு மெயின் ரோட்டில் இருந்து மேலக்சொக்கநாதபுரம் வரை ஒரு கி.மீ., தூரம் ரோடு, மழைநீர் வடிகால், தடுப்புச்சுவர், 3 இடங்களில் பாலங்கள் கட்டுவதற்கான பணிகள் நடந்து வருகிறது.

இப்பணியினை நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் சுவாமிநாதன், போடி உதவி கோட்ட பொறியாளர் தங்கராஜ் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

Advertisement