பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் நமச்சிவாயம் ஆலோசனை

திருக்கனுார்: மண்ணாடிப்பட்டு தொகுதியில் பொதுப்பணித்துறை மூலம் செய்ய வேண்டிய திட்டப்பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

சட்டசபை வளாகத்தில் நடந்த கூட்டத்திற்கு, அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார். பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், மண்ணாடிப்பட்டு தொகுதிக்கு உட்பட்ட அனைத்து கிராமங்களிலும் பொதுப்பணிதுறை மூலம் வரும் நிதியாண்டில் செய்ய வேண்டிய பணிகள் மற்றும் தொகுதி மேம்பாட்டு திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.மேலும், தற்போது நடந்து வரும் பொதுப்பணித்துறை தொடர்பான அனைத்து பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.

Advertisement