பாலியல் வன்கொடுமை வழக்கு; அ.தி.மு.க., நிர்வாகி, போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது

9

சென்னை: சென்னை அண்ணா நகரில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அ.தி.மு.க., நிர்வாகி மற்றும் போலீஸ் அதிகாரியை சிறப்பு புலனாய்வு குழுவினர் கைது செய்துள்ளனர்.

சென்னை அண்ணாநகரில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

இந்த நிலையில் குற்றம் சாட்டப்பட்ட சதீஷ் என்பவருக்கு ஆதரவாக செயல்பட்ட அ.தி.மு.க., 103வது வட்டச் செயலாளர் சுதாகர் என்பவரை சிறப்பு புலனாய்வு குழுவினர் கைது செய்தனர்.
மேலும் இந்த வழக்கை முறையாக விசாரணை செய்யாத மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜி என்பவரையும் சிறப்பு புலனாய்வு குழுவினர் கைது செய்துள்ளனர்.
.

Advertisement