கார்ல்சன் திருமணம்



ஆஸ்லோ: நார்வே செஸ் வீரர் மாக்னஸ் கார்ல்சன் 34. உலகின் 'நம்பர்-1' வீரர். உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் ஐந்து முறை தொடர்ந்து சாம்பியன் ஆனவர்.
இவரது நீண்ட நாள் தோழி எல்லா விக்டோரியா மலோன் 26. தற்போது எல்லா சிங்கப்பூரில் வசிக்கிறார்.
இருவரும் 2024, பிப்ரவரியில் ஜெர்மனியில் நடந்த செஸ் தொடரின் முதன் முறையாக ஒன்றாக காணப்பட்டனர்.

இவர்களது திருமணம் நார்வேயில் உள்ள ஒரு சர்ச்சில் நடந்தது. பின் தலைநகர் ஆஸ்லோவில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டலில் கார்ல்சன்-எல்லா ஜோடி திருமண வரவேற்பு நடந்தது.

Advertisement