டென்னிஸ்: மாயா ரேவதி வெற்றி

புதுடில்லி: ஐ.டி.எப்., டென்னிஸ் முதல் சுற்றில் இந்தியாவின் மாயா ரேவதி வெற்றி பெற்றார்.
டில்லியில் ஜூனியர் பெண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் 15 வயது வீராங்கனை மாயா ரேவதி பங்கேற்கிறார்.

கோவையை சேர்ந்த ரேவதி, சமீபத்தில் ஸ்பெயினில் உள்ள நடாலின் மல்லோர்கா பயிற்சி அகாடமியில் சேர்ந்துள்ளார்.

நேற்று தனது முதல் சுற்றில் மாயா ரேவதி, இத்தொடரின் 'நம்பர்-4' அந்தஸ்து பெற்ற துருக்கியின் அடா கும்ருவை சந்தித்தார். முதல் செட்டை 6-1 என வென்றார் மாயா. 'டை பிரேக்கர்' வரை சென்ற அடுத்த சுற்றை 7-6 என வசப்படுத்தினார். முடிவில் மாயா ரேவதி, 6-1, 7-6 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.

Advertisement